“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப் பின்பற்றப்படுகின்றன. மேலும், இங்கிலாந்து வாரியத்தின் ‘சேஃப் ஹேண்ட்ஸ்’ கொள்கையும் இதில் அமல்படுத்தப்படும்.

இந்திய அணியின் தொடர்பு அதிகாரியுடன் இதுகுறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம். மைதானங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது 15 வயதே ஆகும் வைபவ், அந்நிய நாட்டுச் சூழலுக்குப் பழகுவதற்காகத் தனது பெற்றோருடன் இந்தத் தொடருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.