போட்டோ ஷூட் என வரவழைத்து கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு; விசாரணையில் வெளியான காதல் பின்னணி | photographer body dumped on railway tracks; investigation reveals revenge

Spread the love

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை தனக்குப் புதிய புகைப்பட ஆர்டர் ஒன்று வந்து இருப்பதாகக் கூறிவிட்டு, ஒட்டன்சத்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்று உள்ளார்.

அதன்பின் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

​இதனிடையே கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிரவீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரவீன் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், ரயில்வே காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ​

இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி, “நாங்கள்தான் பிரவீனைத் திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்” எனக்கூறி சரணடைந்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ​கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையே, அந்தப் பெண் பிரவீனுடனும் பழகி வந்து உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *