‘எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்’ தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி | Grandfather killed for money, plan executed by 13 year old teen grand daughter in kerala

Spread the love

பேத்தி திட்டம்வகுத்துக்கொடுத்ததால் கொலைச் செய்யப்பட்ட சிவன்குட்டி

பேத்தி திட்டம்வகுத்துக்கொடுத்ததால் கொலைச் செய்யப்பட்ட சிவன்குட்டி

கொள்ளையடித்ததில் 2 கிராம் நகையைத் தரகர் மூலம் ரூ.16,000-க்கு விற்பனை செய்துவிட்டு சிறுவர்கள் தலைமறைவாகினர். கொலை நடந்த பிறகு இரண்டு நாட்கள் நண்பர்களுடன் தங்கியிருந்த சிறுமி, கடந்த திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து, தாத்தாவைக் காணவில்லை என்றும் வீடு பூட்டப்பட்டிருப்பதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடினார்.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமி முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தார். போலீஸாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து சிறுமி நடந்த உண்மையை கூறினார். அதிலும், தாத்தாவை காதலன் உள்ளிட்டோர் தாக்கி, கொலை செய்வதை 13 வயது பேத்தி வீடியோ கால் வழியாக நேரடியாகப் பார்த்துள்ள அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.

இதையடுத்து, சிறுமி, சிறுமியின் காதலன், காதலனின் நண்பர்கள் இருவர் என நான்கு பேரையும் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.​ இதுகுறித்து ஆலப்புழா எஸ்.பி  டி.கே. விஷ்ணு பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேத்திக்கு ஐபோனும், அவரது காதலனுக்கு பைக்கும் வாங்குவதற்காக வீட்டில் இருந்த 6 பவுன் நகையைத் திருடவே இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்பட்டதே சிவன்குட்டியின் மரணத்திற்கு காரணம் என உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேசமயம், தாத்தா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் அதற்குப் பழிவாங்கவே காதலனிடம் கூறியதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதுகுறித்தும் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *