"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

Spread the love

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போராட்டத்திற்கான அனுமதி கோரி குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஆனால் சிஜேபி அமைப்பு தாமதமாக விண்ணப்பித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

CJP
CJP

இதனைத்தொடர்ந்து டெல்லியின் முக்கியமான பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதில் சிஜேபி அமைப்பினர் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் 7 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியின் மத்தியப் பகுதியில் செல்போன் இணைய சேவையை 24 மணி நேரத்திற்கு முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக 12 தடுப்புக் காவல் மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.

போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

CJP Protest
CJP Protest

அப்பதிவில், ” நமது போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். போராட்டக்காரர்கள் மீதான தீவிரமான ஒடுக்குமுறையும், டெல்லி முடக்கமும் பலத்தின் அடையாளங்கள் அல்ல, மாறாகத் தன் சொந்த மக்களுக்கே அஞ்சி நடுங்கும் ஒரு தலைவரின் பயத்தையே காட்டுகின்றன” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *