போர் முடிஞ்சிடுச்சி.. ஆனா ஈரான் கூட பேசுவோம்! டிரம்ப் என்னென்ன சொல்றாரு பாருங்க! | Trump Declares US-Iran Ceasefire ‘Over’ But Says Talks Will Continue

Spread the love

International

oi-Halley Karthik

நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது.. போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இப்படி டிரம்ப் மாற்றி மாற்றி பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னைக்கு இந்தியா E20 எனும் வித்தியாசமான பெட்ரோலை நோக்கி நகர காரணமே டிரம்ப்தான். சும்மா இருந்த ஈரான் எனும் சங்கை ஊதி கெடுத்தது அவர்தான்.

Trump

அணு ஆயுதம் இருக்கு.. அது இருக்கு, இது இருக்கு என.. ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்தியிருந்தார். விளைவு.. அணு ஆயுதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டால்.. அதுதான் கிடையாது. அதற்கு பதில் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் ரேட் எகிறியதுதான் மிச்சம். அப்புறம் என்ன? உலக நாடுகள் சமாதானம் செய்து.. டிரம்ப்பை வழிக்கு கொண்டு வந்தன.

எனவே ஈரானுடன் டீல் பேசினார். டீலில்.. ஈரான் அணு ஆயுதங்களை விட்டுவிட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக சர்வதேச அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிதியை விடுவிக்கிறோம் என்றும் சொல்லியிருந்தார். எல்லாம் ஓகேவாகியிருந்தது. வெண்ணை திரண்டு வந்த நேரத்தில்.. பானையை போட்டு உடைத்த கதையாக.. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திவிட்டது என்று சொல்லி.. ஈரான் மீது சரமாரியாக அட்டாக் செய்தது அமெரிக்கா.

அவ்வளவுதான் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. பதிலுக்கு ஈரான் தாக்க.. மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

இப்படி இருக்கையில், ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாகவும், ஆனால்.. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இதனை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஈரான்தான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கேட்டதாகவும், அமெரிக்கா இதற்கு ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

என்னவோ செஞ்சிக்கோங்க.. போர் நிறுத்தம் வருமா வராதா? இந்தியாவில் பெட்ரோல், டீசல் ரேட் குறையுமா குறையாதா? E20க்கு ஒரு முடிவு வருமா வராதா? என்று இந்தியர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *