மகளின் தோழியாம்.. 75 வயது தாத்தாவை மணக்கும் 30 வயது பெண்.. ஏன் தெரியுமா? இப்ப ஊரெல்லாம் இதான் பேச்சு | Unbelievable! Why Is a 30-Year-Old Woman Marrying a 75-Year-Old Man? She’s His Daughter’s Friend

Spread the love

India

oi-Hema Vandhana

கான்பூர்: 75 வயதில் ஒருவருக்கு திருமணம் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் 30 வயது பெண்ணுடன் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்! உத்தரப் பிரதேசத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. மணப்பெண் வேறு யாருமில்லை.. அந்த 75 வயது தாத்தாவின் மகளின் தோழி ஆவார்.. இருவருக்கும் 45 வருட வயது வித்தியாசம் உள்ள நிலையில், இப்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது… இதைக்கேள்விப்பட்டு ஊரே வாயடைத்து போய் உள்ளது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் உள்ளது அரியாரி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராம்சுகர்.. இவருக்கு 75 வயது. இவருடைய மகள் ராதா, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை தயாரித்து வருகிறார்.

75-Year-Old Man 30-Year-Old Woman Daughter s Friend Uttar Pradesh Age Gap Marriage 75 30

ரீனா – ராதா நட்பு

அதே மாவட்டத்தின் தயால்பூர் பகுதியை சேர்ந்தவர் ரீனா ராஜ்புத். இவருக்கு 30 வயது. இவரும் சோஷியல் மீடியாவில் வீடியோக்கள், ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்.. இதனால் ராதாவுக்கும் ரீனாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம்தான் இன்று காதல் கதையின் துவக்கமாகும்..

ரீனா, ராதாவை சந்திப்பதற்காக அடிக்கடி ராம்சுகரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தோழிகள் 2 பேரும் சேர்ந்து வீடியோக்களையும் எடுத்து வந்துள்ளனர். இப்படியே சுமார் 2 வருடங்கள் பழக்கம் தொடர்ந்திருக்கிறது.

75 வயது தாத்தா

இந்த சந்திப்புகளின்போதுதான், ராம்சுகருக்கும் ரீனாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கியுள்ளனர். பிறுகு திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளனர்.

ராம்சுகரின் மனைவி சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்.. பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டதாம்.. இதனால் ரீனாவும், ராம்சுகரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.. ஒரு வாரத்துக்கு முன்பு ஔரையாவில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அங்கு இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

45 வருட வயது வித்தியாசம்

45 வருட வயது வித்தியாசம் இருந்தாலும், திருமணம் செய்யும் முடிவில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். வயது காதலுக்கு ஒரு தடையில்லை என்றும், இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரீனா சொல்கிறார்..

நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நவராத்திரி பண்டிகைக்கு பிறகு திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ரீனா தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்துக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2 குடும்பத்தினரும் பாரம்பரிய முறைப்படி திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்..!!!

வெடித்த கருத்துகள்

இந்த நிகழ்ச்சியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டதுமே, மொத்த பேரும் வியப்புற்றனர்.. 75 வயது மாப்பிள்ளையும் 30 வயது மணப்பெண்ணும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் காட்சியைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். அதேசமயம், பலவிதமான கருத்துகளும் எழுந்துள்ளன.

சிலர் வயது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததை ஆதரிக்கின்றனர். இன்னும் சிலரோ, இணையத்தில் பிரபலமாவதற்காக இப்படிச் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள்..

ஹைலைட் என்ன தெரியுமா

இதில் ஹைலைட் என்ன தெரியுமா? மணமகள் ரீனாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதாம்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. ஆனால அவருடைய கணவர் ரீனாவை விட்டு பிரிந்து சென்று விட்டதாக சொல்கிறார்கள்..

ஒருபக்கம் 45 வருட வயது வித்தியாசம்.. இன்னொரு பக்கம் மகளின் தோழியுடன் ஏற்பட்ட காதல்.. அதோடு நிச்சயதார்த்த வீடியோவால் எழுந்த சர்ச்சை… இப்படி பல விஷயங்களால் ராம்சுகர் – ரீனா ஜோடி பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இதெல்லாம் கேட்டு, பல 90’s கிட்ஸ்களின் காதுகளில் புகை வந்து கொண்டிருக்கிறது…!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *