Rain Alert: தமிழகம் முழுவதும் மழை… உங்க மாவட்டத்தில் கனமழையா, அதிகனமழையா? தெரிந்துகொள்ளுங்கள்!

Spread the love

அக்டோபர் மாதம் வரை கொளுத்திய வெயில் சென்றுவிட, இப்போதுதான் தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 15), தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.

லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி,

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், லேசான இடி மின்னலுக்கும் இன்று வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மையத்தில் நேற்றைய அறிக்கை
சென்னை வானிலை மையத்தில் நேற்றைய அறிக்கை

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று…

அதிகனமழை

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை (115.6 – 204.4 மி.மீ) பெய்யலாம்.

கனமழை

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கனமழை (64.5 – 115.5 மி.மீ) பெய்யலாம்.

மிதமான மழை

திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை (15.6 – 64.4 மி.மீ) பெய்யலாம்.

நேற்றைய அறிக்கையின்படி, இன்று தமிழ்நாடு முழுவதுமே மழை உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *