மகள் திருமணத்தில் நடனமாடிய தந்தைக்கு நேர்ந்த சோகம்; திருமணம் முடிந்த பிறகு நடந்த இறுதிச்சடங்கு | Father dies of heart attack while dancing at daughter’s wedding; funeral held after wedding ceremony concludes

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் உள்ள புதார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்லால். அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வரும் இவருக்கு பிரியங்கா என்ற மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

பிரியங்காவிற்கு அவர்களது கிராமத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முந்தைய தினம் இரவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் சங்கர்லால் தனது மகளுடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் அங்கிருந்து உதய்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்து போனார்.

ஆரம்பத்தில் இந்த மரணம் குறித்து தனது தாயார் மற்றும் சகோதரியிடம் சங்கர்லால் மகன்கள் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களால் அந்த உண்மையை நீண்ட நேரம் மறைக்க முடியவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை முதலில் முடித்துவிடுவது என்று முடிவு செய்தனர். எனவே சங்கர்லால் உடல் மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டது. மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அருகில் உள்ள மணமகன் கிராமத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

எனவே மணமகன் மற்றும் உறவினர்கள் 15-20 பேர் மட்டும் அன்று மணமகள் வீட்டிற்கு வந்தனர். அதிகாலை 3 மணியளவில் திருமண சடங்குகள் திட்டமிடப்பட்டபடி முடிந்தன. அதன் பிறகு சங்கர்லால் இறுதிச்சடங்குகள் நடந்தது. மகிழ்ச்சி மற்றும் துக்கத்தை ஒரே நாளில் அனுபவிக்க வேண்டிய நிலை சங்கர்லால் குடும்பத்திற்கு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *