மகாராஷ்டிராவில் 55 லட்சம் விவசாயிகளின் தலா ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி | Farm Loan Waiver of ₹2 Lakh Each for 5.5 Million Farmers in Maharashtra

Spread the love

இப்போது, ​​ரூ. 2 லட்சம் வரை கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளின் முழு கடனையும் அரசு செலுத்தும். ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான கடன் உள்ள விவசாயிகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னரே, மீதமுள்ள ரூ. 2 லட்சம் கடனை அரசு செலுத்தும்.

அதே சமயம், தங்கள் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

அதேசமயம் ஜூன் மாதம் வரை கடனைத் தாமதப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கண்டித்தன. கடந்த ஆண்டு, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று பட்னாவிஸின் அறிவிப்பு குறித்து விமர்சித்திருந்தார்.

இதற்கு முன்பு 2019ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசும் இதே போன்று ரூ.2 லட்சம் அளவுக்கு உள்ள விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தது. அதற்கு முன்பு 2017ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசு 1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது.

ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும்போது விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை மட்டும் மகாராஷ்டிராவில் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *