மகா பிரத்தியங்கிரா ஹோமம்: கண் திருஷ்டி விலகும்… பகைவர் தொல்லை தீரும் – நீங்களும் சங்கல்பிக்கலாம்!

Spread the love

ஆதி சக்தியான அன்னையே ஒவ்வொருவரின் உள்ளும் இருந்து அவர்களை இயக்குபவள். ஓர் உடலின் பிரதி அங்கத்திலும் இருப்பவள் அவளே என்பதாலேயே அவளுக்குப் பிரத்தியங்கிரா என்கிற திருநாமமும் உண்டு. அவளே இவ்வுலகில் சகலத்தையும் ஆட்டுவிப்பவள். சரபரின் இரண்டு இறக்கைகளில் ஒன்றாகத் திகழ்பவள். ஆயிரம் முகங்கள் அவளுக்கு உண்டு.

சிம்ம முகம் கொண்டு அருள்பவள் இந்த அன்னை. ஆன்மாக்களின் பயத்தை போக்குபவள். தீய சக்திகளால் மனதில் பயம் ஏற்பட்டால் அவள் நாமாவைச் சொன்ன மாத்திரத்திலேயே பயம் விலகிவிடும். நிவாரணமும் கிடைக்கும் என்பார்கள். அப்படி உலகில் தீய சக்திகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குபவள். மனமுருகி இந்த அம்பிகையைச் சரணடைந்தால், தோஷங்கள்… குறிப்பாக அபிசார தோஷங்கள் நீங்கும்; இந்த அம்பாளை வழிபடுவோர் இல்லங்களை, எவ்வித தீய சக்திகளும் அண்டாது; விலகி ஓடிவிடும் என்று ஞான நூல்கள் விவரிக்கின்றன. குறிப்பாக காமிக ஆகமம், `தேசத்துக்கும் மக்களுக்கும் ஏற்படும் சங்கடங்களும் பெரும் பாதிப்புகளும் பிரத்யங்கிரா அன்னையை வழிபட்டால் விலகும்’ என்று விவரிக்கிறது. தந்திர சாஸ்திரங்களிலும் இந்த அன்னையின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன.

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மஹா பிரத்தியங்கிரா

இவளுக்கான மந்திரத்தைச் சொன்னவர் ஆங்கிரஸ முனிவர். நம் அங்கங்கள் அனைத்திலும் சக்தியாய் நிறைந்து ஆற்றல் அளிக்கும் தேவி. ஆகவே, இந்த அன்னையை பிரத்யங்கிராதேவி எனப் போற்றி வழிபடுகிறோம். வீட்டில் இந்த அன்னையின் படத்தைத் தெற்குப் பார்த்து வைத்து வழிபடலாம். அல்லது சிறியளவிலான திரிசூலத்தையே பிரத்யங்கிராதேவியாக பாவித்து வழிபடலாம். அதேபோல் எலுமிச்சைப் பழத்தை வைத்தும் அம்பாளாக நினைத்து வழிபடலாம். எலுமிச்சைக்கு ஆகர்ஷண சக்தி அதிகம்.

தினமும் உடல், உள்ளச் சுத்தியோடு எளிய முறையில் `ஓம் பிரத்யங்கிராயை நமஹ’ என்று சொல்லி வழிபடுவதன் மூலம் அந்த அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். வாழ்வில், செய்யும் தொழிலில், திருமணம் முதலான சுபகாரியங்களில் ஏற்படும் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, நல்லன அருள்வாள் அம்பிகை. உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வரமாக அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அப்படிப்பட்ட அன்னையின் மந்திரத்தைச் சொல்லி செய்யப்படும் ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்தது. காரியத்தடைகள் விலக்கும் தன்மை உடையது. பொதுவாக இந்த அன்னையை வழிபட உகந்த நாள் அமாவாசை. அந்த நாளில் அன்னையை நினைத்து ஹோமம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் தீரும். குறிப்பாக கண் திருஷ்டியால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். பகைவர்களின் தொல்லை முற்றிலும் விலக பிரத்தியங்கிரா ஹோமம் மிகுந்த பயன் தரும்.

அப்படி ஒரு ஹோமத்தை சக்தி விகடனும் மாமண்டூர் வடபாதி பூமாத்தம்மன் சித்தர் பீடமும் இணைந்து நடத்த இருக்கிறார்கள். வரும் 16.5.26 சனிக்கிழமை அன்று இரவு 7:30 முதல் 9:30 மணி வரை மஹாபிரத்தியங்கிரா யாகம் நடைபெறவுள்ளது.

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மஹா பிரத்தியங்கிரா ஹோமம்

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மாமண்டூர். இதன் அருகிலுள்ள ஊர் வடபாதி கிராமம். இங்கே சித்த சாந்நித்தியத்துடன் திகழும் பூமாத்தம்மன் சித்தர் பீடத்தில், பிரதான தெய்வமாக் கோயில் கொண்டிருக்கிறாள் பூமாத்தம்மன். காஞ்சி மஹாபெரியவா மஹா கும்பாபிஷேகம் செய்து தந்த திருத்தலம் இது. துர்கைச் சித்தரும் இங்கு வந்து பூஜித்து வழிபட்டுள்ள இந்தத் தலத்தில் ஹோமம் நடைபெறுவதால் மிகுந்த சிறப்பு வாய்ந்தது.

இப்படிப்பட்ட ஹோமத்தில் நீங்களும் சங்கல்பம் செய்துகொள்ள சகலவிதமான பிரச்னைகளும் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு!

இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

அருள்மிகு பூமாத்தம்மன்

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *