மகா பெரியவாளின் புகழ்பெற்ற வாசகம்… பின்னால் இருக்கும் உண்மை இதுதான்! – Kumudam

Spread the love

மகா(ன்)பிரசாதம்

(குமுதம் செய்திகளுக்கு ஜெயாப்ரியன்)

மகாபெரியவாளோட படங்கள், வாசகம் இருக்கும். அதாவது, நீ கவலைப்படாதே! நான் இருக்கேன்னு அர்த்தம். சன்யாசியான பெரியவா, தன்னைத் தானே அத்தனை பெருமையா சொல்லிண்டிருப்பாரா என்ன?

இதுக்கு விடை அவர் அப்படி எதுவுமே சொல்லலைங்கறதுதான். அப்புறம் எப்படி அந்த வாசகம் வந்துது?

ஒருசமயம், மகா பெரியவா முன்னிலை யில உபன்யாசம் ஒண்ணு நடந்துது. அதுல நரசிம்ம அவதாரத்தைப் பத்தி, விஸ்தாரணமா சொல்லிண்டு இருந்தார், உபன்யாசகர். அதுல, பிரஹலாதன், பசுவான் தூண்லயும் இருப்பான் துரும்புலயும் இருப் பான்னு சொன்னதும், இரண்ய கசிபு ஒரு தூணை அடிச்சு உடைச்சான், அதுல இருந்து பகவான் நரசிம்மரா வெளிப்பட்டு, இரண்யனை அழிச்சார்னு சொன்னார்.

உபன்யாசம் முடிஞ்சதும், அவரை ஆசிர்வதிச்ச பெரியவா. “ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமோ?

தன்னை தனுசாஏமாற்றம். வந்துடக் கூடாது. இரண்யகசிபு எந்தத் தூணை உடைச்சாலும் அதுல தான் இருக்கணும்னு, பசுவான் அந்த அரண்மனைல் இருந்த எல்லா தூண்லயும் நிறைஞ்சு இருந்தாராம். எதுலயோ படிச்சேன். இதையும் சேர்த்து சொல்லு சுவாரஸ்யமா இருக்கும்.” அப்படின்னு சொல்லிட்டு,
“இதை எதுக்கு சொல்லச் சொல்றேன்னா, சுவாமி இருக்கார்.
நான் இருக்கேன்!

காப்பாத்துவார்னு முழுசா நம்பறவாளை சுவாமி எந்த சூழல்லயும் கைவிட மாட்டார்ங்கறதை எல்லாரும் புரிஞ்சுக்கணும்கறதுக்காகத்தான்.” மகா பெரியவா சொன்னதோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்டதோட அடையாளமாத்தான், அவரைப் பரிபூரணமா நம்பறவா எல்லாரும், அவரே அப்படிச் சொல்ற மாதிரியான வாசகத்தைப் போட்டுக்கறா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *