மக்களே உஷார்! குடை எடுத்துக்கோங்க… இன்று மழைக்கு வாய்ப்பு…வானிலை அலெர்ட்! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை நிலவரம்

மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. அதிகபட்சமாக திருச்சியில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் திருத்தணியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியே செல்லும்போது வெப்பம் மற்றும் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *