மக்களே உஷார் ! தீவிரமடையும் புயலால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! – Kumudam

Spread the love

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று (16-11-2026) இது மேலும் வலுப்பெற்று தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நகரும் இந்த புயல், நாளை (17-11-2026) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று (16-11-2026) வட கடலோர தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை கனமழை!

நாளை (17-11-2026) சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனைய வட கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது!

இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது.

அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் நாளைய வானிலை எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (16-11-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இன்று (16-11-2026) வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகும் புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கத்தைப் பொறுத்து தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *