மக்களே, நகை வாங்க நல்ல நேரம்… அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை! – Kumudam

Spread the love

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி வரை தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், 21-ந்தேதி முதல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

நேற்று (28/09/2026) தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டது. காலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.235-ம், ஒரு சவரன் விலை ரூ.1,880-ம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.100-ம், ஒரு சவரனுக்கு ரூ.800-ம் விலை குறைந்தது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2,680-ம் சரிந்தது. இதனால், நேற்று முன்தினம் (27/09/2026) ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், ரூ.13,665-ஆகவும், ஒரு சவரன் ரூ.1,12,000-ல் இருந்து ரூ.1,09,320-ஆகவும் குறைந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *