‘மக்கள் தங்குவதற்கு கட்டிடம் இருக்கிறது. ஆனால்…’ – விகடன் செய்திக்கு எழும்பூர் மருத்துவமனை விளக்கம்! |“‘There Is a Building for Patients to Stay, But…’ — Egmore Hospital Responds to Vikatan Report”

Spread the love

முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உதவியாக வரும் உறவினர்கள் வராண்டாவில் நெருக்கடியில் படுத்திருப்பதாக விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நம்மை தொடர்புகொண்டு விளக்கம் கொடுத்தனர்.

மருத்துவமனை சார்பில் கொடுத்த படம்

மருத்துவமனை சார்பில் கொடுத்த படம்

எழும்பூர் மருத்துவமனையின் இயக்குனர் குப்புலெட்சுமி பேசுகையில், “கடந்த ஆட்சியிலேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாரத்தான் மூலம் திரட்டிக் கொடுத்த நிதியில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு கட்டடம் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கே அவர்களுக்கு மின் விசிறியுடன் படுக்கை வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

நானும் RMO மீனாட்சியும்தான் உறவினர்களுக்காக இந்த வசதிகளைப் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தோம். நாங்களும் இந்தக் கட்டடம் சம்பந்தமாக எங்களின் ஊழியர்களின் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் முழுமையாக அந்தக் கட்டடத்தில் வந்து தங்குவது இல்லை”‘ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *