“மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம், தவெக அரசுடன்.!”- ஆளுநர் அர்லேகர் பேச்சு | People can raise public issues at the Raj Bhavan Governor Arlekar’s statement

Spread the love

“பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்” என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார்.

கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சரிடம் கூறுவேன்.

ஆளுநர் அர்லேகர் - விஜய்

ஆளுநர் அர்லேகர் – விஜய்

ஆளுநரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்னை”‘ என்று கூறியிருக்கிறார்.

ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றைப் பற்றி பேசியதும், ஆலோசனைக் கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *