`ரூ.8,500 சம்பளம் வாங்கிய ஒருவருக்கும் எப்படி கோடிக்கணக்கில் சொத்துகள் ?’
அப்படி இருக்கும்போது அவர் மீது துறை ரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ராஜினாமாவை நீங்கள் எப்படி ஏற்றீர்கள்? தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றனர் நீதிபதிகள். அதற்கு, `புதுச்சேரி ஆளுநரின் ஒப்புதலுடன்தான் ராஜினாமா ஏற்கப்பட்டது’ என்றார் மத்திய அரசின் வழக்கறிஞர்.

அதற்கு, `இதுதான் உங்கள் அரசின் கொள்கை என்றால், இதேபோல லஞ்ச வழக்கில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களையும் நீங்கள் ராஜினாமா செய்ய அனுமதிக்கலாமே? மக்கள் உங்களை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள், முதுகில் குத்தாதீர்கள்.
இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றமே தீவிரமாக பரிசீலிக்கும்’ என்று நீதிபதிகள் கெடு விதித்திருக்கின்றனர்” என்றார்.
இதுகுறித்துப் பேசுவதற்காக எம்.எல்.ஏ ரவிக்குமாரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.