இதுகுறித்து தலைமைச் செயலக உயரதிகாரிகளிடம் பேசினோம். ‘சட்டமன்ற சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதை மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் நிரூபித்திருக்கிறார் அப்படி உச்சபட்ச அதிகாரம் படைத்த சபாநாயகரை அரசின் மரபுகளை (புரோட்டக்கால்) பின்பற்றாமல் அரசு மற்றும் பொது நிகழ்வுகளில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவமானப்படுத்துவது திட்டமிட்ட செயலா அல்லது கவனக்குறைவா என்று தெரியவில்லை.
தற்போதைய சபாநாயகரான ஜே.சி.டி.பிரபாகரரை மட்டுமல்ல, இதற்கு முன்பு இருந்த அனைத்து சபாநாயகர்களும் அதிகமான அரசு மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மட்டுமே அவர்கள் பங்கேற்பார்கள். அப்போது, முதல்வருக்கு அடுத்த இடத்தை ஒதுக்கி உரிய மரியாதையை வழங்குவது புரோட்டகால் எனும் அரசு மரபாகும். ஆனால், அதுபோன்ற மரியாதை தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான் வேதனை.
புரோட்டக்கால் தெரியாத பரிதாபம்…
கடந்த ஜூன் 5ம் தேதி காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மரியாதை வழங்கப்படாததால், அவர் கூட்டத்தின் ஓரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் உருவானது. அதேசமயம் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற சபாநாயகர் பிரபாகரனுக்கு உரிய ஆனந்தும் ஆதவ் அர்ஜுனாவும் முதல்வரின் வடது, இடது என ஒட்டிக்கொண்டு, விளம்பரம் தேடிக்கொண்டனர்.
இத்தனைக்கும் புஸ்ஸிக்கு சபாநாயகர் வலியச் சென்று வணக்கம் செலுத்தியபோதும், பதில் மரியாதை செய்ய தவறிவிட்டார் புஸ்ஸி அதைப் பார்த்து நாங்கள் நொந்துபோனோம். இருப்பினும், சரி புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அதனால், அரசு மரபுப்படி யாருக்கு முதலில் மரியாதை வழங்க வேண்டும் என்பது அமைச்சர் புஸ்ஸிக்கு புரியாமல் இருக்கலாம் என அமைதியாகிவிட்டோம்.
ஆனால், அடுத்தடுத்து நடந்த அரக விழாக்களிலும் சபாநாயகர் அவமதிக்கப்பட்டதை பார்த்துதான், இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் திட்டமிட்டே நடக்கின்றன என்று தெரிந்தது. கடந்த ஜூன் 9ம் தேதி முதல்வர் விஜய் கலந்துகொண்ட முதல் அரசு விழாவான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க விழாவிலும் சபாநாயகருக்கு உரிய வழியகப்பிரியன்னை விழா மேடைக்கு அருகில் அமைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பெயரோ பதவி பெயரோ அச்சடிக்கப்பட்ட அட்டை ஒவ்வொரு இருக்கைகளிலும் ஓட்டப்படும்.
அதுபோன்ற எந்தவொரு ஏற்பாடும் அங்கு செய்யாததால், முதல் மூன்று வரிசைகளை அமைச்சர்கள் ஆக்ரமித்து இருந்ததால் நான்காவது வரிசையில் சென்று சபாநாயகர் அமர்ந்துவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செய்தித்துறை அலுவலர்கள், முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அவரே எழுந்து சென்று சபாநாயகரை அழைத்து வந்து முதல் வரிசையில் அமரவைத்தார். ஆனால், அதற்கு முன்பாகவே அங்கு வந்த புஸ்ஸி மற்ற அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அந்த நேரத்தில் சபாநாயகர் நான்காவது வரிசையில்தான் அமர்ந்திருந்தார். அதைப் பார்த்து அவருக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை” என்றவர்கள் ஒருசில நிமிட மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேசினார்கள். “சபாநாயகருக்கு மரியாதை தர வேண்டியது புஸ்ஸிக்கு மட்டுமே உரிய சடமையா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் முதல்வர் விஜய் தனக்கு அடுத்த இடத்தில் அவரைத்தான் வைத்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பாக விஜய் பக்கத்திலேயே புஸ்ஸி அமரமாட்டார் விஜய் முதல்வராக பதவியேற்ற நாள் முதலாகவே எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துவந்தார். ஆனால், அவர் அமைச்சர் இருக்கையில் அமர்ந்தவுடன் பழைய பண்புகளை மறந்துவிட்டார். சிறப்பு சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவிற்கு விஜய்யின் பெற்றோரை அழைக்க வேண்டும் என்பதையே புஸ்ஸி மறந்துவிட்டார். முதல்வரின் தாயார் ஷோபா அந்த விழாவிற்கு வந்ததே புஸ்ஸிக்கு தெரியாது அவரின் வருகை குறித்தும் செய்தித்துறை அதிகாரிகள்தான் புஸ்ஸிக்கு சுட்டிக்காட்டினார்கள். அதன்பிறகே ஓடிச்சென்று ஷோபாவை அழைத்து வந்து முதல் வரிசையில் அமர வைத்தார் புஸ்ஸி. தவெக பொதுச்செயலாளராக இருந்தவரை விஜய்க்கு நம்பிக்கைக்குரிய, விசுவாசமிக்க சேவகனாகதான் புஸ்ஸி இருந்து வந்தார்.
ஆனால் அமைச்சர் பதவி வந்தவுடன் புஸ்ஸியின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறிவிட்டன. அரசு விழாவோ, கட்சி நிகழ்ச்சியோ விஜய்க்கு அடுத்து தனக்குத்தான் எல்லா மரியாதையும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் விஜய்யுடனேயே ஒட்டிக்கொள்கிறார் சபாநாயகர் உள்ளிட்ட உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உரிய மரியாதையை உருவாக்கி தராமல், அவமரியாதை செய்துவருகிறார். இதுபோன்ற செயல்கள் முதல்வர் விஜய்யின் நற்பெயருக்குத்தான் களங்கம் ஏற்படுத்தும் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றார்கள்
இதுகுறித்து விளக்கம் பெற அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை தொடர்புகொண்டோம் மது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவரது உதவியாளர்களிடம் பேச முயன்றோம் அவர்களும்கூட நமது அழைப்பை தவிரித்துவிட்டனர்.
பரமசிவன் கழுத்து பாம்பா புஸ்ஸி ஆனந்த்!



