மஞ்சள் மலருடன் தட்சிணாமூர்த்தி வழிபாடு… மங்கல வாழ்வு தரும்! – Kumudam

Spread the love

மஞ்சள் நிற மலர் குருவுக்கு!
மங்கல வாழ்வு தரும் மந்திரம்!

-வி.ராம்ஜி

குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்றொரு வாசகம் உண்டு. குரு கடாட்சம் இருந்தால், எல்லா கிரகங்களின் தாக்கங்களில் இருந்தும் விடுபடலாம் என்பார்கள். குரு பலம் வந்துவிட்டாலே யோகம் உண்டு; ஞானம் கிடைக்கும்; வாழ்க்கைக்கு துணை கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். ஜோதிட சாஸ்திரமும் தர்ம சாஸ்திரங்களும் இப்படித்தான் அறிவுறுத்துகின்றன. ஆக குருவின் அஷ்டகத்தைச் சொன்னால் அஷ்டதிக்கிலும் வெற்றி நிச்சயம்!

தட்சிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம். சிவ வடிவங்களில் மிக முக்கியமானதொரு வடிவமாக தட்சிணாமூர்த்தி மூர்த்தம். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளும் தட்சிணாமூர்த்தியை சிவாலயங்களில் தரிசிக்கலாம்.

’ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் ஆதி குரு. வேத குரு. ஞானகுரு. யோக குரு. ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அஷ்டகத்தை பாராயணம் செய்து வழிபட்டால், குருவின் பலத்தை அடையலாம். குருவின் அருளைப்பெறலாம். இயலாதவர்கள், அஷ்டகத்தை ஒலிக்கவிட்டுக் கேட்டாலே புண்ணியம்’ என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

அந்த ஸ்லோகம் இதுதான்!அகணித குணகணம ப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
என்று சொல்லி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதாரப் பிரார்த்தனை செய்யவேண்டும். குருவுக்கு உரிய மஞ்சள் நிற வஸ்திரங்கள் சார்த்தி, மஞ்சள் நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.
.
நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
.
ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!

தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை தினமும் சொல்லலாம். வியாழக்கிழமைகளில் மட்டுமேனும் சொல்லி வழிபடலாம். நம் வாழ்க்கைக்கு துணை என்பது மிக மிக அவசியம். அப்படி துணையாக ஆயுள்பரியந்தமாக வருபவர் கணவர், மனைவி! நல்ல வாழ்க்கைத் துணை அமைவதற்கு தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், நல்ல கணவன் கிடைப்பார்! நல்ல மனைவி கிடைப்பார்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *