‘மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?’- தவெகவில் இணைகிறாரா? எம்எல்ஏ விஜயபாஸ்கர் | “Is a genuine journey possible where one is not respected?” — Is MLA Vijayabaskar quitting the AIADMK?

Spread the love

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின.

இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்

சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்

இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி சண்முகமும், விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” என்று பதிவிட்டிருக்கிறார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *