பெரியார் நூலக விவகாரம்: ‘போலி நூல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ – அன்புமணி |Periyar Library: “TN Government Must Release a White Paper on Fake Books Anbumani

Spread the love

போலி நூல்கள் கொள்முதலில் அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் ஆகியவை தவிர மேலும் பல பதிப்பகங்கள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மட்டுமின்றி, நூலகங்கள் கட்டப்பட்டதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட எவரும் தப்புவதற்கு அனுமதிக்கக் கூடாது.

போலி நூல்கள் கொள்முதல் ஊழல் வாயிலாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதும் தமிழக மக்களின் வரிப் பணம் ஆகும். அதனால், இந்த ஊழல் குறித்து அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. இந்த ஊழலால் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுள்ளது.

அதைத் துடைக்க இந்த ஊழலில் தொடர்புடைய பதிப்பாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது தமிழக அரசின் முதன்மைக் கடமை. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

மக்கள் மற்றும் மாணவர்களின் அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களுக்கு நூல்களைக் கொள்முதல் செய்வதில் ஊழலை நடத்தியது மட்டுமின்றி, தரமற்ற போலி நூல்களைக் கொள்முதல் செய்து அறிவை மழுக்கடிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காக பரிந்துரைத்தவர்கள் யார்? அதனடிப்படையில் கொள்முதல் அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்; இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *