‘மதுரைக்குள் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது’ – போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி | ‘No more sticking up posters in Madurai’ – City Corporation puts an end to the ‘poster culture’

Spread the love

மதுரை பலவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும் மதுரையில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள், பிறந்தநாள் போஸ்டர்கள், ரசிகர்களின் சுவரொட்டிகள், விழாக் காலங்களில் வைக்கப்படும் பேனர்கள் போன்றவற்றுக்குத் தனி கவனம் கிடைக்கும்.

100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சி போஸ்டர் கலாசாரத்தால் பல ஆண்டுகளாகவே அல்லல்பட்டு வருகிறது. போஸ்டர்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகின்ற நிலையில், மதுரை மாநகராட்சிக் கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் தலைமையில், மதுரை விளம்பர பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில் மதுரை மாநகரின் தூய்மையையும், அழகையும் பாதுகாத்திடும் வகையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று மதுரை விளம்பரப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் சுவர்கள், கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து சங்க உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

போஸ்டர் கலாசாரம்

போஸ்டர் கலாசாரம்

மேலும் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள், சுவரொட்டிகளை அச்சிடும் அச்சகங்கள் மற்றும் இதில் தொடர்புடைய பிறர் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சங்க உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் தூய்மையையும், அழகையும் பேணும் வகையில், பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் இத்தடையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *