வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
விளக்கு எரிஞ்ச வீடும்பிள்ளை பெத்த வீடும் என்னைக்கும் கெட்டுப்போகாதுஎன்று பெரியவர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறோம்..
அது தான் உண்மையோ என்று தற்சமயம் அவ்வப்போது நினைக்கத்தோன்றுகிறது.
1952ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் தடங்கல்கள் சீரமைக்கப்பட்ட மாற்றங்களுடன் 1972 ஆம் ஆண்டு முழுமூச்சுடன் முழுவீச்சுடன் நடைமுறைக்கு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உண்டு.

பாதிக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை காட்சிகளும் உண்டு. மைல்கல் தொடங்கி மாட மாளிகை கோபுரங்கள் வரை சிவப்பு முக்கோண விளம்பரங்கள் தான் ஆக்கிரமித்திருக்கும் . பள்ளிக்கூட மதில்சுவர்களைக் கூட அரசாங்கமும் குடும்ப நல அலுவலர்களும் விட்டு வைக்கவில்லை. பேருந்துகள் லாரிகள் ஆட்டோக்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சுவர் இருந்தால் தானேசித்திரம் வரைய முடியும் என்பார்கள்.
ஆனால் குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் இல்லாத சுவர்களை பார்ப்பது அரிது. எங்கள் ஊரில் பெரியவர் ஒருவர்’டேய் மக்களே ஒரே இடத்தில் அசையாமயாரும்நின்னுடாதீங்க,உடம்பில்சிவப்பு முக்கோண சின்னம் எழுதிட்டுபோயிடுவாங்க ஜாக்கிரதை’ என்று விளையாட்டாக(வினயமாகவும்)சொல்லுவார். சுவரில்லாத சித்திரங்கள் இருக்கலாம். ஆனால் குடும்ப கட்டுப்பாடு சித்திரங்கள் இல்லாமல் சுவர்களிருக்காது.
சுகாதாரத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் ஓய்வு உறக்கமின்றி இதற்காகவே அலைவார்கள்.மேலிடத்திலிருந்து வரும் அழுத்தங்களையும் குறியீட்டு இலக்கையும்ஒவ்வொரு அடுத்த நிலைக்கும் தள்ளி விடுவார்கள்.
ஆய்வுக்கூட்டங்கள்,விளக்கக்கூட்டங்கள்தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் நடந்த வண்ணமே இருக்கும். குறியீட்டு சாதனைகளை முடிக்காதவர்க்கு வருடாந்திர ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியன நிறுத்தி வைக்கப்படும். சில நேரங்களில் இடைக்கால பணி நீக்கம் கூட நிகழ்வதுண்டு.
குடும்ப கட்டுப்பாடு குறித்த கலை நிகழ்ச்சிகள், சினிமா மற்றும் நாடகங்கள் எங்கும் நடக்கும்.. சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் அடிக்கடி நடத்தப்படும். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் அவர்களின் ஊக்குவிப்பாளர்களுக்கும் பரிசுப்பொருட்களும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

மக்கள் தொகை வட இந்தியாவை விட தென்னகத்தில் படிப்படியாகக் குறைந்தது. மாநில அரசு தலைமை முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரும் தங்களின் சாதனைக்காக பெருமை கொண்டனர். மத்திய அளவில் தென்னிந்தியாவும் குறிப்பாக நம் தமிழ்நாடும்முன்னிலையில் இருந்தது.பாராட்டுகள்,சான்றுகள், கேடயங்கள் , பரிசுகள் என குவிந்தன.
இப்போது மக்கள்தொகை குறைந்து விட்டது.. வாக்காளர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.. வாக்காளர்களும் சிதறி விட்டனர். அதனால் (குறிப்பாக மக்களவை உறுப்பினர்) MP சீட்டும் குறைந்துவிட்டது. இப்போது SIR கணக்கெடுப்பிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.. மாநில அரசாங்கங்களுக்கு இப்போது விழிப்பு வந்து விட்டது.
இன்றைய தலைமுறையை மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகின்றன.. சலுகைகள் அறிவிக்கின்றன.. மூன்றாவது குழந்தை பெற்றால் முப்பதாயிரம் ரூபாய், நாலாவது குழந்தை பெற்றால் நாற்பதாயிரம் ரூபாய் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன.
கல்வியறிவும் சுயசார்புத் திறனும் வேலை வாய்ப்புகளும் இன்று பல்கிப் பெருகிவிட்டன. மக்களிடையே பரம்பரையாக வந்த தொழில்கள் மாறிவிட்டன. சுய தொழில், கணினி சம்பந்தப்பட்ட பணிகள் வேறுபட்ட தொழில் நுட்பங்கள் என வளர்ந்து விட்டன..
தெளிந்த சிந்தனை கொண்ட மக்களும் விழித்துக் கொண்டனர். அன்றைய கூட்டுக்குடும்ப (joint family) சூழலில் குழந்தைகளை வளர்ப்பது அனைவருக்கும் எளிதாகவே இருந்தது..
செலவினங்களும் கட்டுக்குள் இருந்தது. இப்போது ஏறக்குறைய நூறு சதவீத பெண்கல்விமுறை பெற்ற வெற்றியால் நாட்டில் தொண்ணூற்றைந்து சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்லுகின்றனர்.
சுயமரியாதை சுயசம்பாத்தியம் தனித்து முடிவெடுக்கும் திறன் இவற்றில் ஆறிறல் பெற்றவர்களாக உள்ளனர்.தனிக்குடும்ப,( nuclear family lifestyle) வாழ்க்கை முறையையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்.. குழந்தைகள் விடுதிகள் , பள்ளி விடுதிகள், முதியோர் காப்பகங்கள் பெருகிவிட்டன.. அந்தக்காலத்தில் பத்துப்பேர் இருநத கூட்டுக் குடும்பத்திற்கு ஆன செலவைப் போல ஒரு குழந்தைக்கே இன்றுபன்மடங்கு செலவாகிறது.

தனியார் பள்ளிகள் மீதான மோகமும் அதற்கான கட்டணங்களும் அதிகரித்து விட்டன.. தனிநபர் வருமானம் பெருகிவிட்டாலுங்கூட ஆடம்பர ஆசையில் துரத்தும் தேவையற்ற வீண்செலவுகளும் இன்று அதிகமாகிவிட்டன.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது குழந்தை எப்படி சாத்தியம்? என்ன தான் அரசாங்கம் அள்ளிஅள்ளிக்கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. அன்புச்சுமையும் கவனிக்கும் பொறுப்பும் பெற்றோரான இவர்களுக்கானதாயிற்றே. மக்களைப்பற்றி அரசாங்கம் கவலைப்பட்ட காலம் மாறி தங்களின் நிலையை தாங்களே செதுக்கிக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்கள் வந்து விட்டார்கள்… வாக்காளர்கள், வேட்பாளர்கள், வாக்கு முறை ,அரசியல் கட்சிகளின் சுயநலம் , நோக்கம், செயல்பாடுகள் பற்றிப் புரிந்து கொண்டார்கள். ஒருசொட்டு மை(எழுத்தாகும்
போது) கோடிக்கணக்கானோர் மனங்களில் எழுச்சியை விழிப்புணர்ச்சியைஏற்படுத்தும். அதுபோல் வாக்காளரின் ஒரு விரலில் தடவும் மை கட்சிகளின் பலத்தையே, பலவீனத்தையே, ஏன் விதியையே மாற்றும் திறன்வித்தைகொண்டதென்பதை பெரும்பாலும் உணர்ந்து கொண்டார்கள். உணர்த்தி விடுவார்கள்.
எனவே ஒன்று பெற்றால் ஒளிமயம்!
இரண்டு பெற்றால் இன்பமயம்!
அதிகம் பெற்றால் அல்லல் மயம்! நாம் இருவர் நமக்கிருவர்! நாம் இருவர் நமக்கு ஒருவர்! என்ற வார்த்தை ஜாலங்கள் மறைந்து போய் நாமே……. இருவர் …..!! நமக்கேன்…… இனி ஒருவர்?!!என்ற சிந்தனை இளைய தலைமுறையிடம் வந்து விட்டது.எனவே மக்கட்தொகை குறைந்தது இனி குறைந்தது தான்.பெரிய அளவில் மாற்றம் ஏதும் வரப்போவதில்லை.
முதியோர் ஆயுட்கால விகிதம் அதிகரிக்குமே தவிர பிறப்பு விகிதம் உயரப்போவதில்லை. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்நாழி முகவாது நால் நாழி!எனதருமை மக்களே! இது மூதுரை செய்யுளின் முத்தான
வாக்கு !!
-நீலவேணி தேவராஜன்,
கோயமுத்தூர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.