`மதுரையில் இனி பி.டி.ஆரும் கிடையாது, மூர்த்தியும் கிடையாது’ – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

Spread the love

மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “ இனி மதுரையில் மூர்த்தியும் கிடையாது, பி.டி.ஆரும் கிடையாது. மக்களாகிய உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். இனி யாரும் கிடையாது நீங்கள் தான் எல்லாம், நீங்கள் தான் பிரதானம்.

உங்களுக்கு பயந்து தான் வேலை செய்வோம். மதுரையில் எல்லா பகுதிகளிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான ஆய்வுகளை செய்து வருகிறோம். இப்போது தொடங்கினாலும் மூன்று வருடங்கள் இந்த பணிகள் நடக்கும், இது ஒரு பெரிய திட்டம்.

மூர்த்தி  - பி.டி.ஆர்

மூர்த்தி – பி.டி.ஆர்

இதை செய்யாமல் மற்ற பணிகளை செய்யமுடியாது விரைவாக பணிகளை செய்ய முயன்று வருகிறோம். தேர்தல் சமயத்தில் சொன்னது போல வாரத்தில் மூன்று நாள்கள் இங்கு தான் இருப்பேன், எது வேண்டுமானலும் சொல்லுங்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *