மதுரையில் நடைபெற்ற தேசிய குடும்ப மருத்துவ மாநாடு FMPC 2026! | AFPI madurai family medicine and primary care conclave

Spread the love

இந்திய குடும்ப மருத்துவர்கள் அகாடமி (AFPI) ஏற்பாட்டில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், 7-வது தேசிய குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மாநாடு (FMPC 2026) மதுரையில் நடைபெற்றது.

“தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் மனித நேயம்: குடும்ப மருத்துவம் – நோயை குணப்படுத்துவதைத் தாண்டிய அக்கறை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாடு, செப்டம்பர் 27 அன்று நிறைவடைந்தது.

மாநாட்டில் அறிவியல் அமர்வுகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாடு முழுவதும் இருந்து முன்னணி குடும்ப மருத்துவர்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், சுகாதாரக் கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

7-வது தேசிய குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மாநாடு

7-வது தேசிய குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மாநாடு

மாநாட்டின் தொடக்க விழா செப்டம்பர் 26 அன்று மதுரை கோர்ட்யார்டு பை மேரியட் ஹோட்டலில் நடைபெற்றது. தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தலைவர் மற்றும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியத்தின் (NBEMS) தலைவரான டாக்டர் அபிஜத் ஷெத், டாக்டர் P. பத்மநாபன் நினைவுச் சொற்பொழிவை வழங்கினார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் B கண்ணன் மற்றும் டாக்டர் P கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவரான டாக்டர் பிரணீதா ஜெயபிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, இந்திய குடும்ப மருத்துவர்கள் அகாடமியின் (AFPI) தேசியத் தலைவர் கர்னல் (டாக்டர்) மோகன் குபேந்திரா தலைமை உரையாற்றினார்.

இந்திய மருத்துவத் துறையின் மூத்த மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றன. WONCA தெற்காசியப் பிராந்தியத் தலைவர் டாக்டர் பிரமேந்திர பிரசாத் குப்தா, டாக்டர் B.C. ராவ் நினைவுச் சொற்பொழிவை வழங்கினார். குடும்ப மருத்துவத்திற்கான தேசிய பணிக்குழுவின் தலைவர் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் பேராசிரியர் எமிரிட்டஸ் டாக்டர் சுனீலா கார்க், டாக்டர் P.C. பட்லா நினைவுச் சொற்பொழிவை வழங்கினார். தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து விருதுகள் மற்றும் சிறப்பு கௌரவங்கள் வழங்கப்பட்டன.

மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் பானு சந்தர் பாண்டியன் S. நன்றியுரை வழங்கினார். செப்டம்பர் 27 அன்று தேசிய குடும்ப மருத்துவ தினத்தை முன்னிட்டு “Walk for Family Health – குடும்ப நலனுக்கான நடைபயணம்” நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு மதுரை கோர்ட்யார்டு பை மேரியட் ஹோட்டலில் இருந்து நடைபயணம் தொடங்கியது. மதுரை மாநகர காவல் ஆணையர் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *