Tirumala Tirupati Devasthanams approves construction of Tirupati temple in Coimbatore – கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் திருப்பதி கோவில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்!

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தி வரும், “ஜி ஸ்கொயர்’ நிறுவனம், கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள செவன் ஹில்ஸ் சிட்டி என்ற இடத்தில் திருப்பதியில் இருப்பது போலவே, ஒரு பிரமாண்டமான கோயிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இதற்காக ரூ.388 கோடி மதிப்பிலான 19.43 ஏக்கர் நிலத்தை வழங்கவும் அந்த நிறுவனம் முன்வந்தது.

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

இது தொடர்பாக கடந்த 5 ம் தேதியன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுக்கூட்டம், அதன் தலைவர் பொல்லினேனி ராஜகோபால நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனம் வழங்கிய நிலத்தை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.‌ இந்த ஒப்புதல் அடிப்படையில் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் திருப்பதி கோவில் கட்டவும், ஆன்மிக செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கோவைப் புதூர் ஒரு முக்கிய ஆன்மீக மையமாக உருவெடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *