மதுரையில் நடைபெற்ற ‘CEDOI Awards 2026’: 2500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு!| CEDOI Awards 2026 held in madurai

Spread the love

CEDOI – Consummate Entrepreneurs Development Organisation of India என்ற அமைப்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் வெறும் 8 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது.

இன்று, தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களில் செயல்பட்டு, 650-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய தொழில் முனைவோர் நெட்வொர்க் ஆக வளர்ந்துள்ளது.

தொழில்முனைவோர்களை வலுவான Business Networking மூலம் இணைத்து, ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு வழிவகுப்பதே CEDOI-யின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

தரமான பொருட்கள், சிறந்த விலை, விரைவான சேவை ஆகியவற்றை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குவதுடன், தொழில்முனைவோர்களுக்கு இடையே புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே CEDOI அமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.

CEDOI நிறுவனத்தின் தலைவர் டாக்டர் A.S. Reyas அவர்களின் தொலைநோக்குப் பார்வை, “அனைத்து பொருட்களும் மற்றும் சேவைகளும் CEDOI மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும்.”என்பதாகும்.

ஆண்டுதோறும் நடைபெறும் CEDOI Awards

ஒவ்வொரு ஆண்டும் CEDOI அமைப்பின் சார்பில் நடைபெறும் CEDOI Awards, தொழில்முனைவோர் உலகின் முக்கியமான வருடாந்திர நிகழ்வாக உருவெடுத்து வருகிறது.

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி தொழில்முனைவோர்கள், சாதனையாளர்கள் மற்றும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள் இந்த பிரம்மாண்டமான மேடையில் கௌரவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள CEDOI Awards 2026, தென்னிந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான தொழில்முனைவோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய விருது விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ் கட்டர் அரங்கில் 10 – 10 – 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *