மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

Spread the love

ஆனால், இன்று காலை மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது, குடிநீர் தூசி படர்ந்த நிலையில் கறுப்பு நிறத்திலும், அதிகளவில் கலங்கலாகவும் இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குடிநீரை பயன்படுத்தினால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பெண்கள் கவலை தெரிவித்தனர்.

குடிநீரைப் பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள கழிவுகளை அகற்றும் வகையில் சிலர் வெள்ளைத் துணிகளைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டி பிடித்துள்ளனர். இருப்பினும், தண்ணீரில் கலந்துள்ள கழிவுகள் மற்றும் கலங்கல் முழுமையாக நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தானில்  சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்

சோழவந்தானில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்

மேலும், மேலக்கால் ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பல மாதங்களாக முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தொட்டிகளின் உட்புறம் தூசி மற்றும் அழுக்குகள் படிந்த நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *