‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna

Spread the love

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், “இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது.

அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்” என்று ஆதவ் அர்ஜுனாவை நோக்கி பேசினார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, “அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான் நாங்கள் எழுந்திருக்கிறோம்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது. அதை பற்றவைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம். கேஸை பிடுங்கிவிட்டு பற்ற வைத்தால் வெடிக்கும்” என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நான் தம்பி ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். “தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது’ என்று… செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பேசாதீர்கள்.

சட்டமன்றம் நல்லபடியாகப் போய் கொண்டிருக்கும். ஆனால் ஆதவ் அர்ஜுனா எழுந்தால் சட்டமன்றம் 4 மணி நேரம் சண்டையில் போய்விடுகிறது. நேரம் வீணாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *