மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக துணை நிற்கும்!’ – திருமாவளவன் உறுதி

Spread the love

6 பேர் இதுவரை அதிமுக-வில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால், இது அதிமுக-வில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்னை, தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கேள்விகளை அதிமுக-வினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன்.

செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவுசெய்ய வேண்டும் எனக் கருத்து சொன்னபோது, கடுமையான எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது

விஜய் - திருமாவளவன்

விஜய் – திருமாவளவன்

முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.

அமைச்சர் சரத் விஷயத்தில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியதுதான். ஆதாரமில்லாமல் ஒரு கருத்தைச் சொல்லி விட முடியாது.  ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.

கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது, குக்கிராமங்களில் கிடைக்கிறது. எந்தக் கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது. இதற்கு யார் பிண்ணனி என்பதைக் கண்டறிந்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *