தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
அதன் அடிப்படையில், மதுரை மத்தியத் தொகுதியில் தி.மு.க-வில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி, நா.த.க-வில் அப்துல் ஹக்கிம், த.வெ.க-வில் வி.எஸ்.எம் முஸ்தபா போட்டியிடுகின்றனர்.
சுந்தர்.சி, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டாலும் வெளியூர்க்காரர், நடிகர் என்பதால் எளிதாக அணுக முடியாதோ என்கிற பிரச்னையால் தொகுதி மக்கள் இன்னும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். பி.டி.ஆருக்கு எதிராக உள்கட்சிப் பூசல் இருந்தாலும் தொகுதி மக்களிடையே இருக்கும் செல்வாக்கால் முன்னேறிச் செல்கிறார்.
இதேப் போல காரைக்குடியில் மாங்குடி, சீமான், திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கையில் நடிகர் கருணாஸ், மதுரை தெற்கில் ராம சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் என சிவகங்கை – மதுரை – தேனி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் சர்வே முடிவுகள் வெளியாகியிருக்கிறது.