மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

Spread the love

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் உடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றிட கோரியும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரியும் `தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்” சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *