மத்திய அரசுடன் இணக்கம்.. தவெக அரசின் முடிவு வரவேற்கதக்கது.. நிர்மலா சீதாராமன் பேட்டி | TVK’s decision to align with the Central Government is welcome : Nirmala Sitharaman

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

காஞ்சிபுரம்: மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது. சட்ட மன்றத்தில் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேச முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஞ்சிபுரம் கிழம்பி பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.கே.வி.கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா இன்று நடந்தது. இந்த விழாவில் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். காஞ்சிபுரத்தில் பெண் கல்விக்காக 120 ஆண்டுகளாக தொடா்ந்து சேவையாற்றி வரும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் சிறப்பாக நடத்தும் ஒரு அமைப்பின் வரலாற்றை சொல்லும் நூலாக பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற நூலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார். இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

TVK s decision to align with the Central Government is welcome Nirmala Sitharaman

பின் செய்தியாளர்களை சந்தித்த போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது. சட்ட மன்றத்தில் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேச முடியும். ஒரு மாநிலத்தில் உள்ள GDP அளவில் இருந்து 3 % கடன் பெறலாம். கடந்த ஆட்சியில் தமிழகத்துக்கு கொடுக்கவேண்டிய அணைத்து நிதியும் கொடுக்கப்பட்டது, தூத்துக்குடி போன்ற இடங்களில் பெரிய திட்டங்களும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் பின்னும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியும் கட்டாயமாக வழங்கப்படும்.

அரசியல் விமர்சனம் சட்டசபையில் செய்யாமல் வேறு எங்கு செய்வது, எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் பேசுவது தப்பில்லை. மத்திய அரசு மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைக்குடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது, மாநில அரசு கோரிக்கை வைத்தால் எல்லா மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

ஒரு மாநிலம் கடன் வாங்கினால் அதன் மூலம் பொதுமக்கள் சொத்து உயர வேண்டும், இதன் மூலம் வேலை வாய்ப்பு தொழில் உயரும், ஆகையால் கடன் வாங்கினால் கூட பொதுமக்கள் பொருளாதார உயர்ந்தால் நல்ல தாக்கமாக இருந்தால் எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடியது. கடன் வாங்குவது பெரிதல்ல அதன் மூலம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஆனால் கடன் வாங்கி இதை செய்யாமல் பொதுமக்களுடன் நேரடியாக பணம் கொடுப்பது, இதை உயர்த்துவது போன்றவை செய்யலாம் ஆனால் அதிக கடன் வைத்துக் கொண்டு இதை செய்யக்கூடாது ” இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின் போது கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *