ஆன்லைன் க்ளாஸ் மாணவர்களுக்கு ப்ளஸா, மைனஸா?|From Screen Addiction to Flexibility: Online Class Debate Returns

Spread the love

வகுப்பறையில் யார் கவனிக்கிறார்கள்…. யார் என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாக ஆசிரியர்களால் கண்காணிக்க முடியும். ஆனால், ஆன்லைன் கிளாஸில் இதற்கு வாய்ப்பு இல்லை.

மாணவர்களுக்கு தெளிவாக புரிகிறதா, சந்தேகம் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் ஆன்லைன் க்ளாஸ்களில் தெரிந்துகொள்ள முடியாது.

ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கும், மாணவர்களுக்குமான கனெக்ட் இருக்காது. யார் அவர்களது மாணவர்கள்… யார் எப்படி என்பதே ஆசிரியர்களுக்கு தெரியாது.

கொஞ்சம் வயதான ஆசிரியர்கள் என்றால், அவர்கள் தொழில்நுட்பத்தை விரைவில் பழகுவது கஷ்டம்”.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் அ.விமலா

பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் அ.விமலா

“தற்போது பிரதமர் மோடி கூறியிருக்கும் ஆன்லைன் க்ளாஸ் தற்காலிகமானது தானே. அதனால், கல்லூரி மாணவர்களுக்கு தாராளமாக ஆன்லைன் க்ளாஸை பரிந்துரைக்கலாம்.

கொரோனா பேரிடர் காலத்தில் தான் ஆன்லைன் க்ளாஸை புதிதாக பழகுவது சிரமமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. அனைவருமே ஆன்லைன் க்ளாஸிற்கு பழகிவிட்டோம். இப்போது பி.எச்.டி Viva Voce, செமினர் போன்றவை ஆன்லைனில் தான் நடக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *