ஆனால், சட்டப்படி, க்ரூஸ் பயணம் தொடங்குவதற்கு முன்பே, பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டிருக்க வேண்டும்… அவர்களும் அணிந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்தச் சட்டத்தை குறிப்பிட்ட க்ரூஸ் மீறியிருக்கிறது.
குறிப்பிட்ட க்ரூஸ் 40 பயணிகளுக்கு மேல் பயணித்திருக்கின்றனர். ஆனால், 29 பேருக்கு மட்டும் தான் டிக்கெட் வழங்கப்பட்டிருக்கின்றன.
பர்கி டேம் பகுதிக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை மீறியும் அந்தக் க்ரூஸ் பர்கி டேம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தையடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மத்திய பிரதேசம் முழுவதும் க்ரூஸ் பயணங்களை ரத்து செய்துள்ளார்.
குறிப்பிட்ட கப்பலின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் டிக்கெட் கவுண்டர் இன்சார்ஜ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.