“மனைவிக்கு துரோகம் பண்ணிட்டேன்” சீன உளவாளி பெண்ணுடன் தொடர்பை ஒப்புக்கொண்ட NVIDIA CEO! – Kumudam

Spread the love

செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (NVIDIA) தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங், சீனப் பெண் தொழிலதிபருடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஒப்புக்கொண்டு தனது மனைவி மற்றும் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த டேட்டா சென்டர் நிறுவனமான ‘மெகாஸ்பீடு’ (Megaspeed) நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண்ணுடன், ஜென்சன் ஹுவாங் நெருங்கிய காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சீன அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவாளியாகச் செயல்பட்டு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட என்விடியாவின் அதிநவீன ஏ.ஐ. சிப்கள் மற்றும் தொழில்நுட்ப ரகசியங்களை சீனாவுக்கு அனுப்பியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியானது என்விடியா நிறுவனத்தை உலுக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தனது ஊழியர்களுக்கு ஜென்சன் ஹுவாங் அனுப்பிய மின்னஞ்சலில், “நான் எனது குடும்பத்திற்கும் உங்களுக்கும் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டுள்ளேன். எனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன். எனது செயல்கள் மனைவியையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளது; அதற்கு எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. நான் செய்த தவற்றுக்கு முழுப் பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி என்விடியா போர்டு தொடங்கியுள்ள சுயாதீன விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஜென்சன் ஹுவாங் உறுதி அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும் காலத்திலும், ஜென்சன் ஹுவாங் சிஇஓ-வாகவே நீடிப்பார் என்றும், அவர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *