இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மூன்று பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து மாணவர்கள் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இது குறித்து மூன்று பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. மகனை இழந்த தந்தை ஒருவர், கட்டிக்கொண்டு, `எழுந்திரிடா என் ராசா, ஏண்டா இப்படியே கிடக்க… அப்பா வந்திருக்கேன், கண் திறடா” எனக் கதறியவரை யாராலும் தேற்ற முடியவில்லை.

இந்த விபத்து குறித்து மன்னார்குடி மற்றும் வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி அருகே உள்ள லட்சணங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டியுள்ளார். காரில் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர். காரை ஓட்டியவர் உட்பட மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் நிதானத்தை இழந்து காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அப்பாவி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.