மன்னிக்க முடியாத குற்றமா? பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்தது குறித்து ப்ரீத்தியின் பதில் இதுதான் | serial actress preethi’s controversial comment regarding prabudeva’s dance

Spread the love

பிரபுதேவாவிடம் 13 வருடங்களாக நடனம் கற்று தற்போது நடன இயக்குநராக உருவாகியிருக்கும் நோபிள் மாஸ்டரிடம் இது குறித்துப் பேசினோம்.

நோபல் மாஸ்டர்

நோபல் மாஸ்டர்

’’தன்னுடைய குருவுக்கு அவர் மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி அது. பெரிய இடைவெளிக்கு பிறகு பரதம் ஆடியிருக்கார். அதுல போய் அதே பாவனை இல்ல, மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டார்னு சொல்றதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

யார், யாரைச் சொல்றோம்னும் ஒண்ணு இருக்கு. அவர் இன்னைக்கு சர்வதேச அளவுல இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். அப்படிப்பட்டவரை இந்த மாதிரி விமர்சனம் செஞ்சது டான்சர்கள் மத்தியில ஒரு கொந்தளிப்பை உண்டு பண்ணியிருக்கு’’ என்றார் அவர்.

இதுபோல் பலரும் ப்ரீத்திக்கு எதிராக வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சர்ச்சைக்கு வித்திட்ட ப்ரீத்தியையே தொடர்பு கொண்டு பேசினோம்.

‘’என்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தேன். அது தொடர்பா யாரும் ஏதாவது கருத்துச் சொல்லியிருக்காங்கன்னா அது அவங்க உரிமை. மத்தபடி இது தொடர்பா எங்கிட்ட நீங்க கேட்டீங்கன்னா என் பதில் நோ கமெண்ட்ஸ்தான்” என முடித்துக் கொண்டார் அவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *