இதற்குதான் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி சமீபத்தில் எதிர்வினையாற்றியிருந்தார். அவர் கூறியிருப்பதாவது, ‘இந்த விவகாரத்தில் எதற்காக இவ்வளவு ‘அதிர்ச்சியடைய’ வேண்டும்? அரசியலிலும் நிர்வாகத்திலும் பல தசாப்த கால அனுபவம், கடின உழைப்பு மற்றும் அபாரமான அறிவாற்றல் கொண்ட ஒருவர் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? ஒருமுறை நான் அவரிடம், பிரதமராக விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘தகுதியும் திறமையும் கொண்ட எந்தவொரு அரசியல்வாதிக்கும் பிரதமராக வேண்டும் என்ற லட்சியம் இருக்கும்’ என்று அவர் பதிலளித்தார்.
எனது தந்தை மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்தவர். அவர் தனது வாழ்க்கையில் அடைந்த ஒவ்வொரு உயர்வும் அவரது சொந்தத் திறமையாலும் கடின உழைப்பாலும் கிடைத்தவை. பிரதமர் பதவி உட்பட எந்தப் பதவியும், குடும்ப அரசியல் வாரிசுரிமையின் அடிப்படையில் அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை.
அனைத்துத் தகுதிகளும் கொண்ட ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது? காந்தி-நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் இத்தகைய லட்சியத்தைக் கொண்டிருக்கிறார் என்பதற்காகவும், அதைத் தன்னிடம் வெளிப்படுத்தத் துணிந்தார் என்பதற்காகவும் சோனியா காந்தி ‘அதிர்ச்சியடைந்தார்’ என்றால், அதில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டிருக்கிறார்.