Dhoni: 'IPL-ல் இருந்து ஓய்வுபெற்றார் தோனி' – அதிகாரப்பூர்வ அறிவிப்பு; புதிய பொறுப்பு என்ன?

Spread the love

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வந்தார். தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார்.

2024 ஆம் ஆண்டிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகி ஒரு வீரராக மட்டுமே ஆடி வந்தார். கடந்த சீசனில் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசன் முழுவதும் ஆடாமல் இருந்தார்.

தோனி - சிஎஸ்கே
தோனி – சிஎஸ்கே

இந்நிலையில், இன்று தோனி சென்னை அணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘தோனி இல்லாமல் சென்னை அணி இல்லை. இளம் வீரர்களை வழிகாட்டும் ரோலில் தோனி தொடர்ந்து இருப்பார்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *