மயிலாடுதுறையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் | Accident in Mayiladuthurai: Youth survives after being hit by a speeding car

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தத்தங்குடி ரவுண்டானா பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்திற்கு உள்ளாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர், புறவழிச்சாலையில் ஒளிரும் எச்சரிக்கைகள் இல்லாததால் விபத்துக்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தடாளன் கீழத் தெருவை சேர்ந்த 36 வயதாகும் செல்வம் என்பவர் கொல்லுமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு 25 ஆம் தேதி அதிகாலை காரில் ஊருக்கு திரும்பி உள்ளார். மங்கை நல்லூர் அருகே தத்தங்குடி ரவுண்டானாவில் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள ரவுண்டானா தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானது.

Mayiladuthurai accident

இதில் முகம் கால்களில் காயத்துடன் செல்வம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்திற்கு ஏழு தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி பதிவு வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்க கூடிய சோலார் பிளிங்கர் விளக்குகள் மற்றும் பேரி கார்டுகள் இல்லாததே இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் சாலை தடுப்பு சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளதால் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போதிய எச்சரிக்கை விளக்குகள் மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிசிடிவி பதிவு பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விபத்து

திருச்சியில் இருந்து கரூரை நோக்கி இன்று காலை அல்லூர் என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது அப்போது திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ராணுவ வாகனத்தின் மீது மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் லேசான படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *