மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது.
இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ஆவன செய்து வருகிறது.
ஆனால், இப்பள்ளியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லை என்பதையும், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியமான மனநிலையை பற்றியும் விகடனில் 03.08.2025 “பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல“- பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.
அச்செய்தியானது மயிலாடுதுறை மாவட்ட ஆட்யசிரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்கு தனிகழிவறை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கி எட்டு மாதங்களை கடந்த நிலையிலும் கழிவறை கட்டும் பணியானது தொடங்கப்படாமல், ஒதுக்கிய நிதி கிடப்பிலேயே போடபபட்டது.