மயிலாப்பூரில் தமிழிசைக்கு அதிர்ச்சி: மீண்டும் தேர்தல் தோல்வி|Tamilisai Faces Another Defeat in Mylapore Election

Spread the love

2006-ம் ஆண்டில் இருந்து பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

ஆனால், இதுவரை எந்தத் தேர்தலும் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை… சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டிலுமே மக்கள் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் தமிழிசை.

ஆனால், அந்தத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று, நாடாளுமன்ற படிகள் ஏறினார்.

இதனையடுத்து, பாஜக தலைமை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசையை தெலங்கானா கவர்னர் ஆக்கி அழகு பார்த்தது.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

2021-ம் ஆண்டு புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ஆனால், “ஆசை யாரைத் தான் விட்டது?’ 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் மாதம் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவிற்கு பின், சென்னை தெற்கு தொகுதியில் திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டார்.

ஆனால், அதிலும் தமிழிசைக்கு மக்கள் கொடுத்தது தோல்வியைத் தான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *