வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்கள் தடம் பதிப்பது அரிதாக இருந்த காலகட்டத்தில், மருத்துவத் துறையின் மிகவும் சவாலான பிரிவுகளில் ஒன்றான நரம்பியல் துறையைத் தேர்ந்தெடுத்த மருத்துவர்.சி.ஜானகி, அதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்டார். இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் மருத்துவர் என்ற பெருமைக்குரிய மருத்துவர்.சி.ஜானகி, மருத்துவச் சேவை, கல்வி, ஆராய்ச்சி, சமூக அக்கறை ஆகிய அனைத்திலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

சி.ஜானகி, 1927-ஆம் ஆண்டு மே 27-அன்று, அக்கால பர்மாவில் (தற்போதைய மியான்மர்) இருந்த மக்வே என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தை சிவராமகிருஷ்ண ஐயர், பர்மாவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது, 1942–ஆம் ஆண்டு ஜப்பானியர்களின் படையெடுப்பைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் பர்மாவிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்தனர். ஜானகிக்கு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் இருந்தனர். அவரது மூத்த சகோதரியான மருத்துவர்.சி.பத்மாவதி, இந்திய மருத்துவ வரலாற்றில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர் ஆவார்
ஜானகி தனது தொடக்கக் கல்வியைப் பர்மாவில் தொடங்கினார். அவரது குடும்பத்தினர் கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, அவர் அங்கு தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். மருத்துவத் துறையில் சிறந்து விளங்க விரும்பிய அவர், சென்னைக்குச் சென்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியைப் பயின்றார். மருத்துவத்தில் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு, நரம்பியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக ஜானகி இங்கிலாந்து சென்றார்.
லண்டன், எடின்பர்க் நகரங்களில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் உயர்நிலை மருத்துவப் பயிற்சியும் ஆஃப் ராயல் காலேஜஸ் ஆஃப் பிசிஷியன்ஸ் (MRCP-Membership of the Royal Colleges of Physicians), பெல்லோ ஆஃப் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் (FRCP – Fellow of the Royal College of Physicians) உள்ளிட்ட மருத்துவத் தகுதிகளையும் பெற்றார். இந்தியா திரும்பிய பிறகு, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (CMC) இணைந்த அவர், அங்கு நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைகளில் பணியாற்றினார். பின்னர், புது தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நரம்பியல் துறையை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். 1965-ஆம் ஆண்டில், புதிதாகத் தொடங்கப்பட்ட ஜி.பி. பந்த் மருத்துவமனையில், நரம்பியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். அந்தத் துறையை மேம்படுத்தி, மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சையில் அதை ஒரு சிறந்த மையமாக மாற்றுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
நரம்பியல் துறையில் மிக உயர்ந்த சிறப்புப் படிப்பான நரம்பியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம் (DM- Doctorate of Medicine in Neurology) தொடங்குவதிலும், அடுத்த தலைமுறை நரம்பியல் நிபுணர்களை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். அவரது வழிகாட்டுதலில் பயின்ற பல மருத்துவர்கள், பிற்காலத்தில் இந்தியாவின் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தனர். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, மருத்துவ அறிவை விரிவுபடுத்துவதிலும் ஜானகி ஆர்வம் கொண்டிருந்தார்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கேற்படும் மகப்பேறு காலச் சிக்கல்களை மையமாக அவரது ஆராய்ச்சி இருந்தது. இந்தியாவில் கர்ப்ப காலத்தில் வலிப்பு நோயுள்ள பெண்களுக்கு ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்த விரிவான மருத்துவ நெறிமுறைகளை முதன்முதலில் உருவாக்கிய ஜானகி, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், மூளைக் காயம் அல்லது பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்தவர்களுக்காக, நரம்பியல்-மொழி சார்ந்த மறுவாழ்வு சிகிச்சைகளை அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனை குழுக்களுடன் இணைந்து, நரம்பியல் மற்றும் மனநல மேம்பாடு தொடர்பான சர்வதேசத் திட்டங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

நரம்பியல் துறையில் மிக உயர்ந்த சிறப்புப் படிப்பான நரம்பியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம் (DM- Doctorate of Medicine in Neurology) தொடங்குவதிலும், அடுத்த தலைமுறை நரம்பியல் நிபுணர்களை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். அவரது வழிகாட்டுதலில் பயின்ற பல மருத்துவர்கள், பிற்காலத்தில் இந்தியாவின் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தனர். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, மருத்துவ அறிவை விரிவுபடுத்துவதிலும் ஜானகி ஆர்வம் கொண்டிருந்தார்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கேற்படும் மகப்பேறு காலச் சிக்கல்களை மையமாக அவரது ஆராய்ச்சி இருந்தது. இந்தியாவில் கர்ப்ப காலத்தில் வலிப்பு நோயுள்ள பெண்களுக்கு ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்த விரிவான மருத்துவ நெறிமுறைகளை முதன்முதலில் உருவாக்கிய ஜானகி, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், மூளைக் காயம் அல்லது பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்தவர்களுக்காக, நரம்பியல்-மொழி சார்ந்த மறுவாழ்வு சிகிச்சைகளை அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனை குழுக்களுடன் இணைந்து, நரம்பியல் மற்றும் மனநல மேம்பாடு தொடர்பான சர்வதேசத் திட்டங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

நரம்பு மற்றும் தசைகளைப் பாதிக்கும் நரம்பு-தசை கோளாறுகள் (neuromuscular disorders) மற்றும் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளால் உண்டாகும் பக்கவாதம் குறித்து அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இந்த ஆய்வுகளின் வாயிலாக, மருத்துவ மாணவர்கள், இளம் மருத்துவர்கள் மற்றும் சக ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஒட்டுமொத்தமாக, அவர் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மருத்துவத் தேர்வுகள், கல்வித் தர மேம்பாடு மற்றும் மருத்துவப் பயிற்சித் திட்டங்களிலும் பங்களித்த ஜானகி ‘டெல்லி நியூரோ கிளப்’ போன்ற அமைப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றினார். தனது வாழ்நாள் முழுவதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வசதியற்ற ஏழை நோயாளிகளுக்கு அவர் இலவச மருத்துவச் சேவைகளை வழங்கினார். இந்தியாவில் நரம்பியல் துறையின் வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றிய ஜானகி, ‘நியூரோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Neurological Society of India) அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார்.
அவர் ‘இந்தியன் அகாடமி ஆஃப் நியூராலஜி’ (Indian Academy of Neurology) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்; மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நரம்பியல் சிகிச்சைத் தரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.
டெல்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், மருத்துவக் கல்வியின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத, கண்டிப்பான கல்வியாளராக ஜானகி அறியப்பட்டார். அதே வேளையில், அவர் தனது நோயாளிகளை ஒரு தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும் கவனித்துக்கொண்டார்.
ஜானகியும் அவரது மூத்த சகோதரியும், இருதய நிபுணருமான பத்மாவதியும் திருமணம் செய்துகொள்ளவில்லை; இருவரும் தங்கள் வாழ்நாளை முழுமையாக மருத்துவச் சேவைக்கே அர்ப்பணித்தனர். டெல்லியில் ஒரே வீட்டில் வசித்து வந்த இந்தச் சகோதரிகள், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட, மருத்துவப் பணிகளுக்கும் சமூக நலனுக்கும் முன்னுரிமை அளித்தனர். பத்மாவதியால் நிறுவப்பட்ட ‘நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ (National Heart Institute) மற்றும் ‘ஆல் இந்தியா ஹார்ட் ஃபவுண்டேஷன்’ (All India Heart Foundation) ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கும் ஜானகி ஆதரவாக இருந்தார்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள நோயாளிகள், குறிப்பாக இருதய மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், உயர்தர மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்யும் உயரிய நோக்கத்துடன், இந்தச் சகோதரிகள் ‘ஜானகி-பத்மாவதி அறக்கட்டளையை’ (Janaki-Padmavati Foundation) நிறுவினர். டெல்லியில் தனது மூத்த சகோதரி பத்மாவதியுடன் வாழ்ந்து வந்த ஜானகி, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-அன்று, தனது 83-வது வயதில் காலமானார். அவரது மருத்துவப் பாரம்பரியம் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆண்டுதோறும் மருத்துவர்.சி.ஜானகி நினைவுச் சொற்பொழிவு’ (Dr. S. Janaki Memorial Oration) நடத்தப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!