மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? \ Monika Rana IAS Appointed as Tenkasi’s First Woman Collector

Spread the love

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா ராணா, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்குத் தேர்வாகி, தற்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எட்டியிருப்பது அவரது பணிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

மோனிகா ராணா

மோனிகா ராணா

தொடர்ந்து, மலைப்பகுதி மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றிய அவர், தற்போது தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் எட்டாவது ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் மோனிகா ராணா, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்பு, ஐ.ஏ.எஸ் பயிற்சி, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகள் எனப் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள அவரது அனுபவம், தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *