மறைக்கப்பட்ட இந்தியர்களின் மரபணு ரகசியம்! அந்தமான் பழங்குடிகளின் 65000 ஆண்டு ரகசியத்தை உடைத்த தமிழர்

Spread the love

இதனை மாற்றியமைக்க வந்த ‘ஜீனோம் இந்தியா’ திட்டம் அண்மையில் 9,768 இந்தியர்களின் மரபணுக்களை ஆய்வு செய்தது. அதில் கண்டறியப்பட்ட 130 மில்லியன் மரபணு மாறுபாடுகளில், சுமார் 44 மில்லியனுக்கும் அதிகமானவை உலகத் தரவுத்தளங்களிலேயே இல்லாதவை! டாக்டர் தங்கராஜ் பல ஆண்டுகளாகக் கூறி வந்த “இந்திய மரபணுக்கள் தனித்துவமானவை” என்ற கூற்றை இம்முடிவுகள் நிரூபித்துள்ளன. இந்தத் தரவுகள் இந்தியர்களுக்கான பிரத்யேக நோய் தடுப்பு முறைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்திற்கு (Personalised Medicine) வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

மறுபுறம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தற்போது உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.

டாக்டர் குமாரசாமி தங்கராஜ்

டாக்டர் குமாரசாமி தங்கராஜ்

இது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், மனித வரலாற்றின் ஆதிப் புள்ளியாக இருக்கும் இப்பகுதியின் சூழலியலையும், பழங்குடிகளையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவை உலக அறிவியல் வரைபடத்தில் வெறும் தரவு வழங்கும் நாடாகப் பார்க்காமல், மனித பரிணாம வளர்ச்சியின் மையப்புள்ளியாக மாற்றிய பெருமை இந்த தமிழ் விஞ்ஞானியையே சேரும் என்பதைத் தன் உழைப்பால் நிருபித்துள்ளார் பத்மஸ்ரீ டாக்டர் குமாரசாமி தங்கராஜ்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *