மலேசியா டு திருச்சி: நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய நான்கு பேர்! – போலீஸார் விசாரணை- trichy crime!

Spread the love

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர், என்.எஸ்.பி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் சாதிக் பாஷா. இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 150 கிராம் தங்க நகைகளை தனது மாமாவிடம் கொடுக்கும்படி, அய்யனார் மற்றும் கவினேஷ் என்பவர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் கடந்த 4-ம் தேதி அன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தின் மூலம் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் நகைகளை சாதிக் பாட்ஷாவின் மாமாவிடம் கொடுக்காமல் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சீமான் மற்றும் சிங்கப்பாண்டி ஆகியோர்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதர் மைதீன் இது குறித்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுப்பட்ட நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மலேசியாவில் இருந்து கொடுத்து அனுப்பிய நகையை உரியவரிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றிய சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *