மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் “ஜான் டோ’.
ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார்.
இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் இயக்குநர் மதுமிதா, அர்ஜுன் தாஸ்ஸை வைத்து அங்கமாலி டைரீஸின் இந்தி வெர்ஷனை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
“நானும் அர்ஜுன் தாஸும் இணைந்து ஏற்கெனவே ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அது அங்கமாலி டைரீஸின் இந்தி வெர்ஷன். ஆனால் இந்தப் படம் ரீமேக் கிடையாது. அடாப்டேஷன் படம். நிறைய விஷயங்களை இந்தப் படத்தில் மாற்றியிருக்கிறோம்.
நான் எப்போதும் ரீமேக் படங்களை எடுக்க மாட்டேன். ஒரு இயக்குநர் எடுத்த அதே படத்தை நான் எடுப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அர்ஜுன் தாஸின் முதல் இந்தித்திரைப்படம். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பகிர்ந்திருக்கிறார்.