“ஒரு நாலைஞ்சு வருஷத்துல ₹1 கோடி சேர்த்துடணும் சார்…”
இந்த வார்த்தையைச் சொல்லும்போது பலரின் கண்களில் ஒரு பிரம்மாண்டக் கனவு தெரியும். ஆனால், அவரிடம் அடுத்த நொடியே ஒரு எளிய கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்:
“சூப்பர்! அதுக்கு மாசம் எவ்வளவு SIP பண்றீங்க?”
“ம்ம்… ஒரு ₹3,000 பண்றேன் சார்.”
இங்குதான் உண்மையான சிக்கலே தொடங்கும்.
வெறும் ஆசையா… இல்லை கையில் பிளான் இருக்கா?
₹1 கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோரிடமும் இருக்கிறது. பிள்ளைகளின் உயர்கல்வி, சொந்த வீடு, கடன் இல்லாத நிம்மதியான ஓய்வுக்காலம், அல்லது யாருக்கும் பயப்படாமல் வாழும் சுதந்திரம் – இதற்கெல்லாம் ₹1 கோடி ஒரு வலுவான அடித்தளம்.
ஆனால், நம்மிடம் இருப்பது வெறும் ‘ஆசை’தானா அல்லது தெளிவான ‘திட்டம்’ இருக்கிறதா?
உண்மையைச் சொன்னால், நம்மில் பெரும்பாலானோர் செய்வது முதலீடு அல்ல; வெறும் ‘மாதாந்திரத் தவணை’.
நீங்கள் அறியாமல் செய்யும் மிகப்பெரிய தவறு!
“நான் மாசம் ₹5,000 SIP போடுறேன்” என்று சொல்வது ஒரு செயல்பாடு மட்டுமே. ஆனால், அந்தப் பணம் எப்போது ₹1 கோடியாக மாறும்? சந்தை வீழ்ச்சியடைந்தால் என்ன செய்வது? இலக்கு நெருங்கும்போது பணத்தைப் பாதுகாப்பது எப்படி? இதற்கெல்லாம் நம்மிடம் பதில் இருக்கிறதா?
SIP-ஐ ஒரு ‘திட்டமாக’ செய்யாமல், வெறும் ‘மாதாந்திரத் தவணையாக’ (Routine Transaction) செய்வதுதான் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு!
SIP என்பது உங்கள் பயணத்திற்கான ஒரு வாகனம் மட்டுமே. போக வேண்டிய திசையும் வரைபடமும் உங்களுடையது.
சிம்பிளாகச் சொன்னால் டெல்லி சென்றடைய, டெல்லிக்குப் போகும் ஃபிளைட்டில் எற வேண்டும், ஏதோவொரு ஃபிளைட்டில் ஏறிவிட்டால் நீங்கள் போகும் இடத்திற்கு சேர்வீர்கள் என்று அர்த்தமல்ல!

அடுத்து, கணக்கை தலைகீழாக மாற்றும் ‘டைமிங்’!
‘காலம்’ என்ற காரணி நிதி இலக்குகளை தலைகீழாக மாற்றுகிறது. ஒரு உதாரணத்திற்குப் பார்ப்போம் (ஆண்டுக்கு சராசரியாக 12% கூட்டு வட்டி கிடைப்பதாகக் கொண்டால்):
10 ஆண்டுகளில் ₹1 கோடி எட்ட: மாதாந்திர SIP சுமார் ₹43,000
15 ஆண்டுகளில் எட்ட: மாதாந்திர SIP சுமார் ₹20,000
20 ஆண்டுகளில் எட்ட: மாதாந்திர SIP சுமார் ₹10,000
25 ஆண்டுகளில் எட்ட: மாதாந்திர SIP வெறும் ₹5,300!
(குறிப்பு: இது புரிதலுக்கான கணக்கீடு மட்டுமே. சந்தை மாற்றங்களுக்கு உட்பட்டது.)
இலக்கு ஒன்றுதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் ‘கால அவகாசம்’ நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையை பாதியாகக் குறைக்கிறது!
“இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கியதும் முதலீடு செய்கிறேன்” என்று தள்ளிப்போடுவது எவ்வளவு பெரிய இழப்பு என்று இப்போது புரிகிறதா?
எல்லோருக்கும் ஒரே பார்முலா செட் ஆகுமா?
30 வயதில் ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லாமல் பயணத்தைத் தொடங்கும் ஒருவருக்கும், 45 வயதில் ₹20 லட்சம் சேமிப்புடன் அடுத்த கட்டத்திற்குச் செல்பவருக்கும் ஒரே ஃபண்ட் சரி வருமா? நிச்சயம் வராது.
இங்குதான் SIP, Lumpsum, Asset Allocation, Rebalancing, STP, SWP போன்ற நிதி ஆயுதங்களின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை வெறும் ஆங்கிலச் சொற்கள் அல்ல; உங்கள் நிதி இலக்கை அடையும் வெவ்வேறு கருவிகள்.
நீங்கள் கேட்க வேண்டிய சரியான கேள்வி!
“எந்த Mutual Fund நல்லா இருக்கும்?” என்று பிறரிடம் கேட்பதை நிறுத்துங்கள்.
“எனக்கான ₹1 கோடி இலக்கிற்கு இன்றிலிருந்து நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற சரியான கேள்வியைக் கேட்கத் தொடங்குங்கள்.
உங்கள் கனவுக்கு ஒரு தெளிவான ரூட் மேப்!

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை, உங்கள் சொந்த எண்களோடு நீங்கள் கண்டறிய வேண்டுமா?
உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த சிறப்பு ஆன்லைன் பயிலரங்கம்:
₹1 Crore – From Goal to Plan | Mutual Fund Basics Special Workshop
-
₹1 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி?
-
நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
-
SIP ஆரம்பிப்பது எப்படி? ஆரம்பித்தபின் என்ன செய்ய வேண்டும்?
-
பணத்தைப் பெருக்க சரியான முதலீட்டு வழிகள் எவை?
-
இரண்டாவது வருமானத்தை உருவாக்குவது எப்படி?
இவை அனைத்தையும் பெற்றி தெரிந்துகொண்டு, வெறும் ‘ஆசை’யாக இருக்கும் உங்கள் ₹1 கோடி கனவை, துல்லியமான கணக்குகளுடன் கூடிய ‘திட்டமாக’ மாற்ற வாருங்கள்.
100 பேருக்கு மட்டுமே அனுமதி. கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: