மாணவிகள் காயம்: “அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை” – மாணிக்கம் தாகூர் விமர்சனம் | Injuries to female students: “Lack of coordination between government departments” – Manickam Tagore criticizes.

Spread the love

ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று 10 மாணவிகள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணமாகியுள்ளது. ​அரசுத் துறைகளுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பின்மைக்கு மாவட்ட ஆட்சியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

பேருந்து நிறுத்தத்தில் தற்காலிகமாக அதிகாரிகளை நிறுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் இரங்கம்மா சத்திரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவோ அல்லது நிறுத்தப்பட்ட மாணவிகளுக்கான தனி வாகன வசதியை மீண்டும் தடையின்றித் தொடங்கவோ மாவட்ட ஆட்சியர் நேரடித் தலையீடு செய்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றித் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையையும், நிவாரணத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *